close
Choose your channels
LoveToday
CWK

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான 'சரவணன் மீனாட்சி' நடிகை: சீமந்த புகைப்படங்கள்!

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சீரியல் நடிகை கர்ப்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தனர் என்பதும், இந்த ஜோடியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து தம்பதிகள் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஜோடியாக ஒரு சில தொடர்களில் நடித்து வந்த நிலையில் தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாங்கள் விரைவில் பெற்றோராக போகிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி என்று செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ரீஜாவின் சீமந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து ஸ்ரீஜா கர்ப்பமாகியுள்ளதை அடுத்து விஜய் டியின் பிரபலங்கள் இந்த பதிவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.