close
Choose your channels
Viruman
Laal

கையில் துப்பாக்கியுடன் கேங்க்ஸ்டராக சரண்யா பொன்வண்ணன்: அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் ஒரு படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் துறையின் அம்மா நடிகையாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் கேங்க்ஸ்டராக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது. விஷ்ணு ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஆர்எஸ் மனோஜ் என்பவர் இசையமைக்கிறார். கிருஷ்ணா ஒளிப்பதிவு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’கேங்க்ஸ்டர் கிராணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சரண்யா பொன்வண்ணன் கையில் துப்பாக்கியுடன் கேங்க்ஸ்டராக இருக்கும் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

சரண்யா பொன்வண்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தி அம்ஜத் கான், ராஜ் வர்மா உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.