close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

மாலத்தீவு பயணம்… பிகினி புகைப்படத்தை ஷேர் செய்து ஷாக் கொடுத்த இளம் நடிகை!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான், அம்ரித் சிங்கின் மூத்த மகள் சாரா அலிகான். தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்துள்ளார். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குடன் “கேதார்நாத்“ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சாராவின் நடிப்பில் “கூலி நெம்பர் ஒன்“ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் வருண் தவான் நடித்த இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் எல்.பி.ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அத்ரங்கிரே படத்தில் நடிகை சாரா அலிகான் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை சாரா அலிகான் தனது தோழிகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள இயற்கையை ரசித்த அவர் புகைப்படங்களை எடுத்து அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வகையில் நடிகை சாரா அலிகான் பதிவிட்ட பிகினி புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.