close
Choose your channels

பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த விஜய் பட குழந்தை நட்சத்திரம்

Wednesday, August 5, 2020 • தமிழ் Comments

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய ஒரு சில திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா நடித்த ’தெய்வத்திருமகள்’ திரைப்படத்தில் விக்ரம் மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் சாரா. அதன்பின் ஏ.எல்.விஜய் இயக்கிய ’சைவம்’ திரைப்படம் மற்றும் ’விழித்திரு’, ‘சில்லுக்கருப்பட்டி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் தற்போது பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தில் ’சாரா’ ஒரு முக்கிய வேடத்தில்’நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை சாரா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது கொரோனா பரபரப்பு முடித்த பின்னர் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz