close
Choose your channels

லோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்

Monday, September 28, 2020 • தமிழ் Comments

’மாநகரம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, அந்த படம் கிடைத்த மாபெரும் வெற்றி காரணமாக கார்த்தி நடித்த ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து, அடுத்த படமே அவருக்கு விஜய் நடிக்கும் ’மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் முதல்முதலாக இணைந்து நடித்துள்ள இந்த படம் லோகேஷ் கனகராஜை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

’மாநகரம்’ திரைப்படத்தை சந்தோஷ்சிவன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மாசே மற்றும் சஞ்சய் மிஸ்ரா ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஜய் நடித்த ‘புலி’, விக்ரம் நடித்த ’சாமி 2’ உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த திரைப்படத்தில் கார்த்தி நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz