'அந்தகன்' இசையமைப்பாளர் நான் தான்.. ஆனால் இது என் பாடல் இல்லை: சந்தோஷ் நாராயணன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
'அந்தகன்’ படத்தின் இசையமைப்பாளர் நான் தான் என்றும் ஆனால் நேற்று வெளியான பாடல் நான் கம்போஸ் செய்தது மாதிரி இல்லை என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆன்ந்தம் பாடலை நேற்று தளபதி விஜய் வெளியிட்டார். இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திடீரென தனது சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'அந்தகன்’ படத்தில் நேற்று வெளியான இசை, பாடல் வரிகள், மிக்ஸிங், இசை கோர்வுகள் எதுவுமே நான் அமைத்தது மாதிரி இல்லை’ என்று கூறியுள்ளார். மேலும் இதனை அவர் வடிவேலு மீம்ஸை பயன்படுத்தி பதிவு செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் ’என்ன இப்படி சொல்கிறீர்கள்’ என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ’இந்த பாடலுக்கு இசை, வரிகள், மிக்ஸ், மாஸ்டர் என அனைத்தும் செய்தது நான் தான், ஆனால் நான் அதை செய்தேன் என்பதை பரிசோதிக்க கட்டணம் எதுவும் வசூலிக்க போவதில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.
For the first time in history, the audio label is also playing a blind character - method acting ? . FYI I don’t charge a fee to check if the actual music/lyric/arrangement/mix/master is actually mine . All The Best Of Luck 😂😂 https://t.co/i7rWKBFQ9N pic.twitter.com/iMq0dhxmfj
— Santhosh Narayanan (@Music_Santhosh) July 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments