close
Choose your channels
PatamPoochi
mayoon

ஏன்டா என்னை கூறுபோட்டு வித்துகிட்டு இருக்க: 'ஏஜண்ட் கண்ணாயிரம்' டீசர்

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகை பொறுத்தவரை காமெடி நடிகர்கள் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடித்த படங்கள் நல்ல ஹிட்டாகி உள்ளன என்பது தெரிந்ததே. நாகேஷ் முதல் வடிவேலு வரை பல காமெடி நடிகர்கள் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ’ஏஜென்ட் கண்ணாயிரம்’.

கிராமப்புறத்தில் சுத்தப்பட்டு பதினெட்டு பட்டிக்கும் துப்பறியும் நிபுணராக இருக்கும் சந்தானம் சந்திக்கும் பிரச்சனைகள் காமெடியாக இந்த படத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த படம் சந்தானத்தின் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மனோஜ் பீதா இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், அஜய் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.