close
Choose your channels

ஜிகிர்தண்டா ரீமேக்: ரஜினி நடிக்க விரும்பிய கேரக்டரில் சஞ்சய்தத்

Tuesday, October 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, லட்சுமிமேனன் உள்பட பலர் நடித்த 'ஜிகிர்தண்டா' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தில் நடித்த பாபிசிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. சித்தார்த் கேரக்டரில் ஃபர்கான் அக்தார், பாபிசிம்ஹா நடித்த அசால்ட் சேது கேரக்டரில் சஞ்சய்தத் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை நிஷிகந்த் கமத் இயக்கவுள்ளார்.

வரும் டிசம்பர் 4ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சஞ்சய்தத், ரஜினியே நடிக்க விரும்பிய அசால்ட் சேது கேரக்டரில் நடிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.