close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

சாண்டியுடன் வீடியோ வெளியிட்டு மச்சினிச்சி பெருமிதம்!

Thursday, August 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடன இயக்குனர் சாண்டியுடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது மச்சினிச்சி இந்த வீடியோ குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சாண்டி சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ உள்பட பல திரைப் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒருசில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடன இயக்குனர் சாண்டி, சில்வியா என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவின் தங்கை சிந்தியா வினோலின் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் சாண்டியுடன் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இருவரும் ஒரே ஸ்டெப்ஸ்களில் நடனம் ஆடி அசத்திய அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து சில்வியா, ’நடன மாஸ்டர் சாண்டி அவர்களுக்கு உதவியாளராக இருந்ததற்கு நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.