close
Choose your channels

சோம், ரியோவுடன் ஆட்டம் போட்ட சம்யுக்தா: வைரல் வீடியோ

Sunday, March 21, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொரு போட்டியாளரின் இன்ப துன்பங்கள் நிகழ்ச்சிகளில் மற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். வேறு எந்த சீசனிலும் இல்லாத ஒற்றுமை, சீசன் 4 போட்டியாளர்களிடம் இடையே இருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியாகியுள்ள வீடியோவில் சம்யுக்தா, சோம்சேகர் மற்றும் ரியோராஜ் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளது. இதனை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

சமீபத்தில் சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் வெளியான ’என்ஜாய் என்ஜாமி’ என்ற தனிப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் இந்த பாடலுக்கு கிடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்யுக்தா, சோம், மற்றும் ரியோ ஆகிய மூவரும் இந்த பாடலுக்குத்தான் நடனமாடி உள்ளனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz