close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் ஷிவானி இருக்க தகுதியற்றவரா? சம்யூக்தா அதிரடி!

Friday, October 9, 2020 • தமிழ் Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோவில் ‘கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்’ இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் யார் என நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று பிக்பாஸ் கேள்வி ஒன்றை எழுப்பினார்

இந்த கேள்விக்கு போட்டியாளர்கள் கலந்தோசித்த பின்னர் பதிலளித்த மாடல் அழகி சம்யுக்தா, ஆஜித், ஷிவானி, ரம்யா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய நால்வரும் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் இவர்கள் வாழ்க்கையில் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்

இந்த முடிவை சுரேஷ் ஏற்று கொண்டு என் பெயர் இந்த பட்டியலில் சேர்த்தது சரிதான் என்று கூறினார். ஆனால் முதல் வாரமே இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர் பட்டியலில் ஷிவானி இடம்பெற்று இருப்பது அவரது ஆர்மியினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இன்ஸ்டாகிராமில் தினமும் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து லைக்ஸ்களை குவித்து வந்த ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை கடந்த நான்கு நாட்களில் அவர் எந்த வித பெர்பாமன்ஸ்ஸும் செய்யவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் கேப்ரில்லா, ரேகா, சனம்ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகிய நால்வர் மட்டுமே இருப்பதால் இப்போதைக்கு ஷிவானி வெளியேற்றம் இருக்காது என்பது ஒரு ஆறுதல்

Get Breaking News Alerts From IndiaGlitz