close
Choose your channels
Don
Nenjukku Needhi

தனுஷின் 'வாத்தி' அப்டேட் கொடுத்த நாயகி சம்யுக்தா!

Wednesday, January 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்துவரும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது என்பதும் தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான சம்யுக்தா படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவர் இன்று முதல் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

‘வாத்தி’ படத்தின் டைட்டிலை பார்க்கும் போது தனுஷ் இந்த படத்தில் வாத்தியார் கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அவர் மாணவர் போல் தோற்றமளித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.