close
Choose your channels
Anbirkiniyaal

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்: கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா!

Monday, November 30, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சம்யுக்தா வெளியேறிய நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். டாப்பிள் கார்ட் மூலம் நான் நாமினேஷன் செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அப்படியே நாமினேஷன் செய்யப்பட்டிருந்தாலும் இந்த வாரம் நான் வெளியேறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் சம்யுக்தா கமல்ஹாசனிடம் பேசியபோது கூறினார்

மேலும் பிக்பாஸ் வீட்டில் தான் ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக அனுபவித்ததாகவும் இங்கு எனக்கு புதிய உறவுகள் கிடைத்தது என்றும் இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா தனது வீட்டிற்கு சென்றபோது அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற குடும்பத்தினர், சம்யுக்தாவின் வருகையை கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் எட்டு வாரங்களுக்கு பின் தனது குழந்தையுடனும், குடும்பத்தினர்களுடனும் சம்யுக்தா மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


 

Get Breaking News Alerts From IndiaGlitz