close
Choose your channels
cred

பா ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ மற்றும் டைட்டில் அறிவிப்பு!

Tuesday, December 8, 2020 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ ’காலா’ படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் ’சார்பேட்டா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய திரைப்படம் ஒன்றை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் ஃபிராங்க்லின் ஜேக்கப் என்பவர் இயக்கவுள்ளார்

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த இந்த படத்திற்கு ’ரைட்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் பா ரஞ்சித் ஏற்கனவே குதிரை வால்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் மனோஜ் லியானெல் மற்றும் சியாம் சுந்தர் ஆகிய இரட்டையர்கள் இயக்கும் இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பதும், பிரதீப்குமார் இசையில் கார்த்திக் முத்துக்குமார் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz