எனக்கு பிறந்தது மகன் மட்டுமில்லை.. நானும் தகப்பனாய் பிறந்தேன்: 'ராமம் ராகவம்' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்த "ராமன் ராகவம்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
"2 கிலோ 300 கிராம் எடையை என் கையில் கொடுத்த போது, 'உனக்கு மகன் பிறந்திருக்கிறான்' என்று சொன்னார்கள். அப்போ எனக்கு பிறந்தது மகன் மட்டுமல்ல, நானும் தகப்பனாய் பிறந்தேன்," என்று சமுத்திரக்கனி கூறும் வசனத்துடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பமாகிறது.
இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் உணர்ச்சிமயமான சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதை வைத்து, இந்த படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்ராஜ், ஹரிஷ் உத்தமன், சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அருண் இசையமைத்துள்ளார்.
இந்த படம் அடுத்த வாரம், அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பா மகனுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் பாசப்பிணைப்பு கதையம்சம் கொண்ட இந்த அப்பா கேரக்டரில் சமுத்திரக்கனி, மகன் கேரக்டரில் தன்ராஜ் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com