close
Choose your channels

நடிகை சமந்தா அறிவித்த சர்ப்ரைஸ் இதுதான்.. சமூக ஆர்வலர்களிடம் இருந்து குவியும் பாராட்டு..!

Thursday, February 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா அடுத்த வாரம் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் அந்த சர்ப்ரைஸ் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா மயோசிட்டிஸ் நோய் காரணமாக சில மாதங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பதையும் பார்த்து வந்தோம். தற்போது நடிகை சமந்தா முழு அளவில் உடல் நலம் பெற்ற நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பாக அவர் நடித்து வந்த ’சிட்டாடல்’ என்ற வெப்தொடரின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் செய்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தான் நடிப்புக்கு திரும்பி வந்து விட்டதாக உறுதி செய்த நிலையில், உடல் ஆரோக்கியம் குறித்த ’பாட்காஸ்ட்’ சேனல் ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுகிறேன் என்றும் அது அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது சமந்தா ’பாட்காஸ்ட்’ சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அறிவித்து அதன் பெயர் ’டேக் 20 ’என்றும் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான அல்கேஷ் ஆகிய இருவரும் இந்த ’பாட்காஸ்ட்’ சேனலில் உடல் நலம் பற்றி பேச போவதாகவும் முதல் வீடியோ பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் சமந்தா அறிவித்துள்ளார்.

திரை உலக பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில் சமந்தா பொதுமக்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு உடல் நலம் குறித்த ’பாட்காஸ்ட்’ சேனலை ஆரம்பித்துள்ளதை அடுத்து சமூக ஆர்வலர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.