close
Choose your channels
NMM
NMM

அடுத்தடுத்த 2 மாதங்களில் சமந்தாவின் 2 படங்கள் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் நடித்து வரும் ’குஷி’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமந்தா நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’சாகுந்தலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’சாகுந்தலம்’. குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நவம்பர் 4ஆம் தேதி ‘சாகுந்தலம்’, டிசம்பர் 23ஆம் தேதி ‘குஷி’ என சமந்தாவின் 2 திரைப்படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.