close
Choose your channels

சமந்தாவின் 'குஷி': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ’குஷி’ திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் நிர்வானா இயக்கத்தில் ஹேஷம் அப்துல் வகாப் இசையில் உருவான திரைப்படம் ’குஷி’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழ் தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவான இந்த படம் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஓடிடி ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அக்டோபர் ஒன்றாம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 'குஷி’ படத்தை திரையரங்கில் மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos