close
Choose your channels

ஆப்பிள் வாட்சுக்கு பதில் கற்கள்: பிரபல இசையமைப்பாளருக்கு ஆன்லைன் நிறுவனம் அளித்த பதில்!

Tuesday, September 15, 2020 • தமிழ் Comments

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் தனது சகோதரருக்கு பரிசளிக்க ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த நிலையில் அந்த பார்சலில் வெறும் கற்கள் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் 

விக்ரம் வேதா, கைதி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் நோக்கி சென்று கொண்டிருப்பவர் சாம் சிஎஸ். இவர் தனது சகோதரருக்கு பரிசளிப்பதற்காக முன்னணி ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த வாட்ச் பார்சலில் வந்தவுடன் மிகவும் ஆசையுடன் பிரித்து பார்த்தபோது அதில் ஆப்பிள் வாட்ச்க்கு பதிலாக கற்கள் வரிசையாக அடுக்கி வைப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார் 

உடனே இது குறித்து அவர் அந்த நிறுவனத்திடம் புகார் அளித்தும், அந்த நிறுவனம் தங்களது பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டதாகவும் இது ஒரு மோசடி நிறுவனம் என்றும் இந்த நிறுவனத்தில் யாரும் பொருட்களை வாங்காதீர்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்

இதை பார்த்த அந்த ஆன்லைன் நிறுவனம் உடனடியாக ’தங்களுக்கு நேர்ந்த இந்த தவறுக்கு வருந்துகிறோம் என்றும் உடனடியாக உங்கள் ஆர்டர் காப்பியை அனுப்பி வைத்தால் அதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz