close
Choose your channels
Rocketry
Yaanai

ஜாலியா ஆட்டோ ரிக்சா ஓட்டிய சல்லுபாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் மும்பை நகர் சாலையொன்றில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதுபோன்ற வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

நடிகர் சல்மான் கான் தனது 56 ஆவது பிறந்தநாளை கடந்த 27 ஆம் தேதி கொண்டாடினார். பன்வெல் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்திற்கு முன்பு அவரை விஷப்பாம்பு ஒன்று 3 முறை கடித்ததாக இணையத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் கமோத்தே பகுதியில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனக்கு விஷ பாம்பு முறிவதற்கான ஊசி செலுத்தப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 6 மணிநேரம் மருத்துவமனையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து நடிகர் சல்மான் கானின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பன்வெல் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் நடிகர் சல்மான் கான் படு உற்சாகமாக ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டியிருக்கிறார்.

தலையில் தொப்பி மற்றும் டிசர்ட் அணிந்துகொண்டு நடிகர் சல்மான் கான் ஆட்டோ ரிக்ஷாவை ஓட்ட அவருடைய நண்பர்கள் ஆட்டோவில் அமர்ந்திருக்கும் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.