close
Choose your channels

நயன்தாரா படத்தில் பெண் இசையமைப்பாளர் அறிமுகம்.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

Thursday, May 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தில் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாக இருப்பதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் மற்றும் நயன்தாரா நடிக்க இருக்கும் திரைப்படம் ’தி டெஸ்ட்’. கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சாக்சிஸ்ரீ கோபாலன் என்பவர் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே பெண் இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் என்ற வாய்ப்பை பெற்றுள்ள சாக்சிஸ்ரீ கோபாலன், ’தி டெஸ்ட்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இடத்தை பெறுவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment