ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய பிக்பாஸ் கவர்ச்சி நடிகை! வைரல் வீடியோ!
நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் இவற்றில் ஒரு சில கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அஜீத் நடித்த ’ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ’ஸ்டைலிஷ் தமிழச்சி’ என்ற பாடலுக்கு சேலையில் கவர்ச்சியாக தோன்றி சாக்சி அகர்வால் நடனமாடும் காட்சிகள் குறித்த வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சாக்ஷி அகர்வால் தற்போது சக்தி செளந்திரராஜன் இயக்கி வரும் ‘டெடி’, சுந்தர் சி இயக்கி வரும் ‘அரண்மனை 3, மற்றும் ’புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது