close
Choose your channels
Don
Nenjukku Needhi

மாடலிங்க் துறையில் நுழைந்த சச்சின் மகள்… தீயாய் வைரலாகும் பிக்!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியில் முடிசூடா மன்னனாக வாழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவருடைய பேட்டிங் திறமைக்கு ரசிகர்கள் மட்டுமல்ல இன்றைய இளைய தலைமுறை கிரிக்கெட்டர்களும் அடிமைகளாக இருந்து வருகின்றனர். அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய இவர் அவ்வபோது சில விளம்பரங்களில் தோன்றி வருகிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதிகளின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் தற்போது முதல் முறையாக மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் பிரபல ஆடை விளம்பர நிறுவனம் ஒன்றிற்காக இவர் முன்னணி மாடல்களாக இருந்துவரும் பனிதா சாந்து, தானியா ஷரோப் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற சாரா, இதற்கு முன்பே ஸ்டைலிஷ் உடைகளை அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படம் வெளியிட்டு வந்தார். இதனால் ஒன்றரை லட்சம் ஃபாலோயர்களை இவரை பின்தொடர்கின்றனர். மேலும் தனது அம்மா அஞ்சலியைப் பின்பற்றி லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் சாரா டெண்டுல்கர் மருத்துவர் பட்டம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்மாவை பின்பற்றி மகள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும் தற்போது சாரா மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்னொரு பக்கம் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் தீராத ஆர்வம் கொண்டு உள்நாட்டு போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.