close
Choose your channels
Viruman
Laal

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலம்!

Tuesday, October 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து பல அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் தாதா சாகிப் பால்கே விருது பெற்றதற்கு கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ரஜினியை ’தலைவா’ என அழைத்து ’ஒவ்வொரு முறையும் தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது அதிர்வு அலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிக குறைவு என்றும், ஆனால் ’தலைவா’ ரஜினிகாந்த் அவர்கள் ஒவ்வொரு முறையும் அதை செய்கிறார் என்றும், தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்கிறார் என்றும், தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரஜினி அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். 

ரஜினியை ரசிகர்கள் ’தலைவா’ என்று அழைக்கும் நிலையில் தன்னையும் ஒரு ரசிகனாக நினைத்து சச்சின் டெண்டுல்கர் ரஜினியை ’தலைவா’ என அழைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.