close
Choose your channels
Don
Nenjukku Needhi

விலகியது 'ஆர்.ஆர்.ஆர்', 'வலிமை'யுடன் பொங்கல் ரேஸில் இணைந்த பிரபல நடிகரின் படம்!

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்கு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி ’வலிமை’ திரைப்படமும் 14ஆம் தேதி ’ராதே ஷ்யாம்’ திரைப்படமும் ரிலீசாகும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய சூழ்நிலையின்போது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.