close
Choose your channels
Don
Nenjukku Needhi

இயக்குனர் பாலா அறிமுகம் செய்த பிரபல நடிகருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ’தாரை தப்பட்டை’ என்ற திரைப்படத்தில் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்கே சுரேஷ். அதன்பிறகு மருது, தர்மதுரை உள்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தவர் ’பில்லா பாண்டி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் தன்னுடைய குழந்தையை மருத்துவமனையில் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் குடும்பம் இந்த குழந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது, அம்மா மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் உள்ளனர்’ என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ஆர்கே சுரேஷுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.