close
Choose your channels
aranmanai

'கலைஞர் 100' விழாவில் அஜித் கலந்து கொள்வாரா? ஆர்கே செல்வமணி பதில்..!

Tuesday, November 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலகினர் சார்பில் கலைஞர் 100’ என்ற விழா டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இதையடுத்து இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அனைத்து பிரபல நடிகர்களையும் கலந்து கொள்ள வைக்க முயற்சி எடுக்கப்படும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’விஜய் அஜித் உட்பட அனைத்து கலைஞர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த விழாவுக்கு கலைத்துறையினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினர்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளதாகவும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கலைஞர் 100 விழாவில் அஜித், விஜய் ஆகிய இருவரும் கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment