close
Choose your channels

நயன்தாரா இல்லாமல் 'மூக்குத்தி அம்மன் 2'.. பிஸியான நடிகையிடம் ஆர்ஜே பாலாஜி பேச்சுவார்த்தை..!

Thursday, May 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

’மூக்குத்தி அம்மன்’ என்ற கேரக்டருக்கு நயன்தாரா மிகவும் பொருத்தமாக இருந்தார் என்றும் இந்த படத்தின் வெற்றிக்கு அவரது கேரக்டர் மற்றும் நடிப்பு ஒரு காரணம் என்றும் விமர்சனங்கள் வெளியாகி என்பது தெரிந்தது.

ஆனால் தற்போது ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தை உருவாக்க முடிவு செய்துள்ள ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் கேரக்டருக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யாமல் தமிழ் திரை உலகில் பிஸியாக இருக்கும் இன்னொரு நடிகையான த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி உட்பட பெரிய நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் நயன்தாராவை தவிர இந்த படத்தில் நடித்த ஊர்வசி உட்பட மேலும் சில நட்சத்திரங்கள் இரண்டாவது பக்கத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment