close
Choose your channels
NMM

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த பட டைட்டில் இதுவா? நாயகி, இயக்குனர் தகவல் இதோ!

Thursday, August 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேடியோ ஜாக்கியாக இருந்த ஆர்ஜே பாலாஜி அதன் பின் தமிழ் திரையுலகில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் ’எல்கேஜி’ என்ற படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்றார் என்பதும் அந்த படம் பெற்ற வெற்றியை அடுத்து அடுத்தடுத்து ஹீரோ மற்றும் இயக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆர்ஜே நடித்து இயக்கிய நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ‘வீட்ல விசேஷம்’ திரைப்படமும் வெற்றி பெற்றதால் அவர் ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜி தற்போது அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார். அவருடைய அடுத்த படத்திற்கு ’சிங்கப்பூர் சலூன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கோகுல் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஷிவானி ராஜசேகர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.