close
Choose your channels
Conjuring Kannappa

திரையரங்கில் சூப்பர்ஹிட்டான 'வீட்ல விசேஷம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tuesday, July 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

சென்னை, ஜூலை 12, 2022 - ஜீ 5 தளம் தனது அடுத்த பெருமை மிகு வெளியீடாக சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெயினர், அட்டகாசமான குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை ஜூலை 15, 2022 முதல், உலக பிரீமியர் செய்கிறது. பதாய் ஹோ, எனும் ப்ளாக்பஸ்டர் இந்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தழுவலான இப்படத்தில், ஆர்ஜே பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் NJ சரவணனுடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு நடுத்தர வயது தம்பதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் போது, அது அவர்களின் வளர்ந்த மகன்களை சங்கடப்படுத்துகிறது. இந்த குழப்பங்களை கடந்து அந்த குடும்பத்தில் எப்படி சிரிப்பு மலர்கிறது எனும் கதை, உறவுகளின் அழகை வலியுறுத்துவதன் மூலம் நகைச்சுவை மற்றும் இதயத்தைத் தொடும் உணர்ச்சிகளின் மிகுதியாக இப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பார்வையாளர்கள் கொண்டாடிய ‘வீட்ல விசேஷம்’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பதில், ஜீ5 மகிழ்ச்சி அடைகிறது. இன்றைய காலகட்டத்தில் தரமான கதைகள், திரில்லர்கள், க்ரைம் கதைகள் நிறைந்திருக்கும் நிலையில், இப்படம் சரியான சிரிப்பு சரவெடியாக, பல அட்டகாச தருணங்களுடன் ரசிகர்களை மகிழ்விக்கும். மிகச்சிறந்த பொழுதுபோக்கு என்டர்டெய்னர் என விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட ‘வீட்ல விசேஷம்’ படத்தினை, திரையரங்கு சென்று பார்க்க முடியாதவர்களுக்காக அவரவர் வீட்டில் கொண்டு சேர்ப்பதில் ஜீ5 பெருமை கொள்கிறது. பார்வையாளர்களின் மன அழுத்தத்தை நீக்கி, மனம் விட்டு சிரிக்க வைக்கும், இப்படத்தை அனைவரும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் ஜீ5 தளத்தில் கண்டு களிக்கலாம்.

இது குறித்து ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறியதாவது.., “ஜீ5ல் எங்களுக்கு தமிழ் மொழி மிக முக்கியமான சந்தையாகும், எங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த படைப்புகளை அளிக்க வேண்டுமென்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறோம். தமிழ் சந்தையில் எங்களின் இருப்பை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறோம். ரசிகர்கள் எதிர்பார்க்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்தை ஜீ5 இல் வெளியிடுவதில் வெகு உற்சாகமாக இருக்கிறோம். இந்த திரைப்படம் பதாய் ஹோ எனும் வெற்றிகரமான இந்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். பதாய் ஹோவை ரசித்தது போல் பார்வையாளர்கள் இப்படத்தையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறோம். உலகெங்கிலும் உள்ள ஜீ5 பார்வையாளர்களுக்கு அசத்தலான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்குவோம் என்று நம்புகிறோம்.

ஜீ5 தளமானது இந்திய துணைக் கண்டத்தில் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாக மாறியுள்ளது, அசல் தொடர்கள் திரைப்படங்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வணிக ரீதியான பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.