படப்பிடிப்பில் விபத்து.. 3 நாட்களாக கண்ணை திறக்காமல் இருளில் தத்தளித்த 'ரன் பேபி ரன்' நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆர்ஜே பாலாஜி நடித்த ’ரன் பேபி ரன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவருக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக கண்ணில் காயமடைந்து மூன்று நாட்கள் கண்ணை திறக்க முடியாமல் இருளில் தத்தளித்ததாக தெரிவித்துள்ளார்.
மிர்ச்சி சிவா நடித்த ’தில்லுமுல்லு’ மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான ’மீண்டும் ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில தமிழ் மற்றும் மலையாள ஹிந்தி படங்களில் நடித்தவர் நடிகை இஷா தல்வார். சமீபத்தில் வெளியான ‘ரன் பேபி ரன்’ என்ற திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் காதலியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் இஷா தல்வார் கலந்து கொண்டிருந்த போது ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின் போது படக்குழுவினர் வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் இஷா தல்வார் இடது கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் மூன்று நாட்களாக அவர் கண்ணை திறக்க முடியாமல் தத்தளித்ததாகவும் கூறியுள்ளார். பிறகு மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது நலமாக இருப்பதாகவும் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.