close
Choose your channels

கார்த்திக் சுப்புராஜ் - பிரபுதேவா படத்தின் நாயகி இவரா?

Thursday, June 22, 2017 • தமிழ் Comments

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் ஒன்று சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பெயர்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமான தரப்பு கூறுகிறது. இந்த படத்தின் திருப்புமுனை கேரக்டரில் ரம்யா நடித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பீட்சா' படத்தில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் என்பது குற்ப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் 'ஜில் ஜங் ஜக்' படத்தில் நடித்த சனாத் ரெட்டியும் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

சந்தோஷ் நாராயணன் இசையில் திரு ஒளிப்பதிவில் வளர்ந்து வரும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz