close
Choose your channels

ரேகா- சனம் ஷெட்டி திடீர் மோதல்: கேப்டன் ரம்யாவின் பரிதாபம்!

Friday, October 9, 2020 • தமிழ் Comments

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் சண்டையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது மேலும் ஒரு சண்டை புதிதாக தோன்றியுள்ளது. நேற்று சமையல் செய்யும்போது ரேகா மற்றும் சனம்ஷெட்டி இடையே ஒரு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சனம்ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையேயும் ஒருசிறு மோதல் வெடித்தது

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் ரேகா மற்றும் சனம்ஷெட்டி நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சிகள் உள்ளன. நான் குளித்துவிட்டு வருவதற்கு முன் நான் செய்ய வேண்டிய சமையலை ரேகா செய்துவிட்டதாக சனம்ஷெட்டி குற்றச்சாட்ட, நான் உனக்கு ஹெல்ப் தான் பண்ணினேன் என்று ரேகா கூறுகிறார்.

அப்போது குறுக்கிட்ட கேப்டன் ரம்யா, நீங்கள் யாருக்கும் ஹெல்ப் பண்ண வேண்டாம்,உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்ல, கேப்டன் ரம்யா மீது ரேகா பாய்ந்ததால், ரம்யாவின் நிலை பரிதாபமாக இருந்தது.

ஆகமொத்தம் தற்போது பிக்பாஸ் வீட்டில் அடுத்த சண்டையும் தொடங்கிவிட்டதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்கள் அமைதியாகவும் பெண் போட்டிகள் பொங்கி எழுந்தும் வருகின்றனர் என்பது இதுவரை நடந்த நிகழ்வுகளில் இருந்து தெரிய வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz