close
Choose your channels
Por
Joshwa

ஒரு நூற்றாண்டுக்கு இந்த ஸ்டில்லை மறக்க முடியாது: இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கததை மாற்றிய ஜடேஜா..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் டைட்டில் பட்டம் வென்ற நிலையில் இந்த டைட்டில் பட்டம் பெற முக்கிய காரணமானவர்களில் ஒருவர் ஜடேஜா என்பதும் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உலக கோப்பை உட்பட எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும் கூட உணர்ச்சிவசப்படாத தோனியே கூட ஜடேஜாவை அலேக்காக தூக்கி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வந்தன. தோனியின் முகத்தில் இந்த அளவிற்கு ஒரு சந்தோஷம், பூரிப்பை இதுவரை ரசிகர்கள் மட்டுமின்றி சக அணியினர் கூட பார்த்ததில்லை.

இந்த நிலையில் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி தன்னை தூக்கி வைத்த ஸ்டில்லை முகப்பு பக்கத்தில் வைத்துள்ளார். இந்த ஸ்டில் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பேசப்படும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களில் ஒருவரான ஜடேஜா இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.