நான் வேணும்னா வேலையை ராஜினாமா செய்திடட்டுமா? ரவிச்சந்திரன் அஸ்வின்


Send us your feedback to audioarticles@vaarta.com


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் நேற்று முடிவடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியில் பந்து வீசியது அனைவரும் ஆச்சரியப்படுத்திய நிலையில் அவர்களுடைய பந்துவீச்சை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நான் வேணும்னா வேலையை ராஜினாமா செய்திடவா? என பதிவு செய்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் முடிவடைந்த போதும் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே நிறைவு பெற்றிருந்ததால் இந்த போட்டி ட்ராவை நோக்கி செல்வது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய இறுதி நாளின் போது இந்த போட்டி டிரா என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பேட்ஸ்மேன்களான சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவருக்கும் பந்து வீசும் வாய்ப்பை கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்தார். இருவருமே தலா ஒரு ஓவர் வீசி ஒரு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர்.
இருவரும் பந்துவீசும் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ’நான் வேணும்னா வேலையை ராஜினாமா செய்திடவா’ என நகைச்சுவையுடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
Main kya karu? Job chod du? 😂 pic.twitter.com/R0mJqnALJ6
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments