close
Choose your channels

அடிக்கிறதுக்கு முன்னாடி வார்னிங் கொடுக்குறது என் வழக்கம்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட 'டைகர் நாகேஸ்வரராவ்' டிரைலர்..!

Tuesday, October 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரவிதேஜா நடிப்பில் உருவாகி உள்ள ’டைகர் நாகேஸ்வரராவ்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவையே ஆட்டி படைத்த பெரும் கொள்ளைக்காரன் ஆன டைகர் நாகேஸ்வரராவ் வித்தியாசமான முறையில் கொள்ளையடிப்பது, கொள்ளையடிக்கும் முன் போலீசாருக்கு வார்னிங் கொடுப்பது என புதுமையான திருட்டுகளில் ஈடுபடும் காட்சிகள் இந்த படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜா ஸ்டூவர்ட்புரம் கொள்ளையனாக நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நூபுர் சனான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனுபவம் கெர், முரளி ஷர்மா, நாசர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘தி காஷ்மீர் ஃஃபைல்ஸ்’ என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ளார். இந்த படம் விஜய்யின் ’லியோ’ வெளியாகும் அடுத்த நாள் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலர் அட்டகாசமாக இருப்பதை எடுத்து படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment