close
Choose your channels
ZEBRA

ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன வயதில் ஒரு தங்கச்சியா? புகைப்படம் வைரல்

Friday, May 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு இவ்வளவு சின்ன வயதில் ஒரு தங்கச்சியா? என நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு கமெண்ட்ஸ்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 31 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது குடும்ப புகைப்படத்தை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் அப்பா மதன் மந்தனா, அம்மா சுமன் மந்தனா , தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘இதுதான் மந்தனா குடும்பம் என்றும் எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்ததற்கு நீங்கள் தான் காரணம் என்றும் உங்கள் மீது எங்கள் குடும்பமே அன்பு செலுத்துகிறது என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் ராஷ்மிகாவின் தங்கை ஷிமன் மந்தனாவை பார்த்து ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சிறிய வயதில் ஒரு தங்கச்சியா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment