close
Choose your channels
LoveToday
CWK

மார்பில் ஆட்டோகிராப் போட சொன்ன ரசிகர்.. அதிர்ச்சி அடைந்த ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா?

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் மார்பில் ஆட்டோகிராஃப் போடச் சொன்ன ரசிகர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது ஒரே நேரத்தில் விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘இளம் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அவருடன் மறுக்காமல் செல்பி எடுத்துக்கொண்ட ராஷ்மிகா, அதன்பின் தனது மார்பில் ராஷ்மிகா ஆட்டோகிராப் போட வேண்டும் என்று அதே ரசிகர் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அந்த ரசிகர் கெஞ்சி கெஞ்சி கேட்டதை அடுத்து அவரது டீசர்ட்டில் தனது ஆட்டோகிராபை பதிவு செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்யுடன் ’வாரிசு’ என்ற திரைப்படத்திலும் அல்லு அர்ஜூனனுடன் ’புஷ்பா 2’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அமிதாப்பச்சன் உடன் ராஷ்மிகா நடித்த ‘குட் டே’ என்ற படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.