close
Choose your channels
siren
lal_salaam

அனுஷ்காவுக்காக 'ரஞ்சிதமே' பாடகி மானஸி பாடிய பாடல்.. வீடியோ வைரல்..!

Wednesday, March 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ’ரஞ்சிதமே’ என்ற பாடலை பாடிய பாடகி மானஸி தற்போது நடிகை அனுஷ்காவுக்காக பாடிய பாடல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் "மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. விவேக் எழுதிய பாடலை எம்எம் மானஸி பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை இசை அமைப்பாளர் ராதான் கம்போஸ் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’நோ நோ’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ராதான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.