close
Choose your channels
capmaari
capmaari
champion

'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் ஒரு இளம் நடிகை!

Saturday, November 9, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவ்வப்போது சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியல் அனைவருக்கும் ஆச்சரியத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா, மேலும் சில முக்கிய கேரக்டர்களில் சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு இளம் நடிகை இணைந்துள்ளார்.

விஜய் நடித்த பல படங்களின் ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கிய ரம்யா தான் அந்த இன்னொரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதற்குள் மேல் என்னுடைய கேரக்டர் குறித்து கூற முடியாது என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தற்போது ’தளபதி 64’ படப்பிடிப்பிற்காக டெல்லியில் இருப்பதாகவும் விஜய்யின்  ரசிகையாக அவரை தூரத்தில் நின்று பார்த்து ரசித்து கொண்டிருந்த தனக்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தன்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்து விட்டதாக தாம் கருதுவதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும் திறமையான இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz