close
Choose your channels
anabel
friendship

பிக்பாஸ் ஷிவானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பரசுபாண்டியன்: அப்புறம் என்ன செய்தார் தெரியுமா?

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி என்பதும் அவர் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அமைதியாக இருந்த போதிலும் கடைசி நேரத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் சிங்க பெண்ணாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை ஷிவானி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் இன்று அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஷிவானியின் பிறந்தநாள் காமன் டிபி போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு பிறந்த நாள் வரும்போது காமன் டிபி போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பரசுபாண்டியன் ஷிவானியின் பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz