close
Choose your channels

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி: கார்னர் செய்யப்படுகிறாரா?

Friday, October 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 10 நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வந்த ஷிவானிக்கு நேற்று அர்ச்சனா ’அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்’ என்ற விருதை கொடுத்து அட்வைஸும் செய்தார். இதுவரை அமைதியாக இருந்தது போதும் இனி மேலாவது உங்கள் திறமையை காண்பியுங்கள் என்று அர்ச்சனா கூறிய அட்வைஸை ஷிவானி ஏற்றுக் கொண்டாரா என்பதை போகப்போக தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவாக உள்ள இரண்டு பேர்களை எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூற, அதற்கு பெரும்பாலானோர் ஷிவானி மற்றும் ரமேஷை தேர்வு செய்தனர். இதனை அடுத்து ரமேஷ், ஷிவானி ஆகிய 2 பேரையும் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட பிக்பாஸ் உத்தரவிட்டார் இதனை அடுத்து இருவரும் கண்ணாடி அறைக்குள் பூட்டப்பட்டனர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த டாஸ்க்கில் மிஸ் பிக்பாஸ் சீசன்4 விருது ஷிவானிக்கும், மிஸ்டர் பிக்பாஸ் சீசன்4 விருது ரமேஷுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஈடுபாடு இல்லாத போட்டியாளர்கள் என்று அதே இருவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது இந்த நிகழ்ச்சியின் முரண்பாட்டின் மொத்த உருவமாகவும் இருவரும் கார்னர் செய்யப்பட்டு இருப்பதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

இருப்பினும் கூண்டுக் கிளியாக மாறி உள்ள ஷிவானியும் ரமேஷூம் அடுத்து வரும் நாட்களில் பொங்கி எழுவார்களா? என்பதை போகப்போக தான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.