close
Choose your channels
siren
lal_salaam

ரக்சிதா சிபாரிசு செய்தவர் பிக்பாஸ் போட்டியாளரா?  தினேஷ்க்கு சிக்கலா?

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

மாகாபா ஆனந்த், ரோஷினி, ஊடகவியலாளர் ரஞ்சித், ஷகிலா மகள் மிலா, நடிகர் பிருத்விராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி பிரபலம் ரவீனா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் உள்ள ஒரு சில சீரியல்களில் நடித்த நடிகர் விஷ்ணுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ’ஆபீஸ்’ ஜீ டிவியில் ’சத்யா’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த விஷ்ணு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த சீசனில் அவர் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரக்சிதா, இவருடைய நெருங்கிய நண்பர் என்பதால் அவர்தான், இவரை சிபாரிசு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரக்சிதாவின் கணவர் தினேஷ் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தினேஷ் மீது போலீசில் புகார் அளித்தவர்களில் ஒருவர் விஷ்ணு என்பதால், தினேஷும், விஷ்ணுவும் பிக்பாஸ் போட்டியாளர்களாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் விஷ்ணுவுடன் சத்யா சீரியலில் நடித்த ஆயிஷா ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஷ்ணு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.