close
Choose your channels
Don
Nenjukku Needhi

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ராஜூ, பிரியங்காவுக்கு வருமானம் இத்தனை லட்சங்களா?

Monday, January 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் இதில் எதிர்பார்க்கப்பட்டபடியே ராஜூ டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் இரண்டாம் இடம் பிடித்த பிரியங்கா ஆகிய இருவருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது போக அவருக்கு வாரம் ரூ.1.50 லட்சம் சம்பளம் என்று பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் 15 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததை அடுத்து ரூ.21 லட்சம் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆக மொத்தம் அவருக்கு மொத்தம் 71 லட்ச ரூபாய் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த பிரியங்காவுக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் சம்பளம் என்றும் இவர் 15 வாரம் வீட்டில் இருந்ததால் 30 லட்சம் மொத்த சம்பளம் என்றும் கூறப்படுகிறது. ராஜூ மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் 30 சதவீதம் வரி போக மீதி பணம் அவர்களது கைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.