ஐந்தே நிமிடத்தில் டிரண்டான #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ’தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்
அதன்படி சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் ஜனவரி முதல் கட்சி தொடக்கம் என்றும் அவர் சற்று முன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் போல் இந்த ட்விட்டை கொண்டாடி வருகின்றனர்
இந்த நிலையில் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல! என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய ரஜினி ரசிகர்கள் அதனை ஐந்தே நிமிடத்தில் டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர். ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளாக இடம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினியின் அரசியல் வருகையால் தமிழக அரசியலிலும், திராவிட கட்சிகளின் கூட்டணியிலும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்