close
Choose your channels
marketraja
enpt
Bigil

சிவாஜி பட டைட்டில், ரஜினியின் ஆதரவு: மீண்டும் களத்தில் ஏவிஎம்

Friday, November 1, 2019 • தமிழ் Comments

இந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காத நிலையில் தற்போது ஏவிஎம் நிறுவனத்தின் வாரிசு நடிக்கும் படம் ஒன்று தயாராகிறது

இந்த புதிய படத்திற்கு ‘அந்த நாள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1954ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படம் தான் தமிழ் சினிமாவில் முதல்முறையாக பாடல்களே இல்லாமல் வெளிவந்த படம் ஆகும். இந்த படத்தில் சிவாஜி கணேசன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் கிளைமாக்ஸில் மனைவி பண்டரிபாயால் சுட்டுக்கொல்லப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 65 வருடங்கள் கழித்து மீண்டும் ‘அந்த நாள்’ என்ற பெயரில் உருவாகும் படத்தில் ஏவிஎம் நிறுவனத்தின் எம்.எஸ்.குகன் அவர்களின் மருமகன் ஆர்யன் ஷ்யாம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டு தனது ஆதரவையும் ஆசியையும் தெரிவித்துள்ளார்

விவி என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். க்ரீன் மேஜிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ரகுநாதன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்,

Get Breaking News Alerts From IndiaGlitz