அமிதாப்பச்சனிடம் நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது இதனை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய திரை உலகின் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தும் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்
அந்த வகையில் அமிதாப்பச்சன் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது