close
Choose your channels
Raayan

தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் அளித்த ஜப்பான் ரஜினி ரசிகர்கள்..!

Friday, May 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஜப்பான் சென்ற நிலையில் அங்கு ரஜினி ரசிகர்கள் அவருக்கு சர்ப்ரைஸ் அளித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றார் என்பதும் சிங்கப்பூரில் அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு இன்று ஜப்பான் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டின் தொழில் அதிபர்களை அவர் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யும் மாறு அவர் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஜப்பான் சென்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு, ஜப்பான் ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்தது பெரும் சர்ப்ரைஸ் ஆக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஜப்பானிலும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் தினத்தில் ஜப்பானிலும் ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜப்பான் ரஜினி ரசிகர் மன்றத்தினர் தமிழக முதல்வரை வரவேற்றது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment