close
Choose your channels
DJ

தாத்தாவுடன் தீபாவளி கொண்டாட்டம்: ரஜினி பேரன்களின் மாஸ் புகைப்படங்கள்!

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பட்டது என்பதும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும், ரஜினி, கமல் உள்பட பல திரையுலக பிரபலங்களும் தீபாவளி வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்கள் மற்றும் தந்தை ரஜினிகாந்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்களின் கால்களுக்கும் மஞ்சள் சந்தனம் பூசி விடுவது போன்றும், மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடிக்கும் காட்சிகளும் உள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. ரஜினிகாந்தின் 2 பேரன்களும் தீபாவளி கொண்டாடிய இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.