close
Choose your channels

'பாபா' படத்திற்காக மீண்டும் ரஜினி செய்த வேலை.. கிளைமாக்ஸ் மாற்றப்படுகிறதா?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக மீண்டும் ரஜினிகாந்த் டப்பிங் செய்துள்ளதாகவும் சமீபத்தில் அந்த டப்பிங் பணியை அவர் முடிந்ததாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ’பாபா’ படத்தின் கிளைமாக்சில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது போன்ற காட்சியுடன் படம் முடியும் நிலையில் அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு இந்த கிளைமாக்ஸ் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தை அதிகாலை காட்சி கூட வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் கதை திரைக்கதையை ரஜினிகாந்த் எழுதி, தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.